- Home
- Gallery
- Horoscope Today: மேஷம், துலாம் ராசிக்கு திடீர் பண வரவு உண்டாகும்..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..
Horoscope Today: மேஷம், துலாம் ராசிக்கு திடீர் பண வரவு உண்டாகும்..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..
Horoscope Today- Indriya Rasipalan june 25 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம், துலாம் ராசியினருக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் விலகும், மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு ஆபத்து ஏற்படும். அப்படியாக, இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும்.புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் அவசியம். சுபகாரியத் தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் குவியும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். புதிய பொலிவுடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அவசியம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த இனிய நாளாக இருக்கும். தொழிலில் லாபம் கூடும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய எல்லா வகையும் சாதகமாக உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு போட்டி பொறாமைகள் வலுவாக கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். மகிழ்ச்சி கடலில் நீந்துவீர்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னிறைவு உண்டாகும். உங்கள் சுய தேவைக்கு மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சிநிறைந்த நாளாக காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எங்கும் எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பேச்சில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு பிடித்தவர்கள் இடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். நண்பர்கள் வட்டத்தில் தகுந்த சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:
விருச்சிக பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுகம் உண்டாகும். உங்களை எதிர்த்து போட்டியிடும் அவர்களை சுலபமாக வெற்றி கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் உயர்வு உண்டாகக் கூடும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் முளைக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு காரணமாக பிரச்சனைகள் வரலாம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களை சாதக பலன் உண்டு. பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும். திடீர் அதிர்ஷ்டம் வரும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை அவசியம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பன்மடங்கு லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பம் நீடிக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி அடைய கூடிய அனைத்து சுப செய்திகளும் வரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கூடும். உங்கள் தரப்பு நியாயங்களை தைரியமாக முன் வைக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.