அட்லீயை அட்டாக் பண்ண இத்தனை பேரா... இந்த வாரம் ஜவானுடன் மல்லுக்கட்ட தமிழில் இம்புட்டு படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
Theatre release Tamil movies : அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி உள்ள ஜவான் படத்துக்கு போட்டியாக தமிழ்நாட்டில் ரிலீசாகும் தமிழ் படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 7-ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள்
ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் சிறு பட்ஜெட் படங்கள் ஏராளமாக ரிலீஸ் ஆகி இருந்தன. ஆகஸ்ட் 7-ந் தேதி ஜவான் ரிலீஸ் ஆக உள்ளதால் இந்த வாரமும் சிறு பட்ஜெட் படங்கள் கம்மியாக ரிலீஸ் ஆகும் என எண்ணிய நிலையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூடுதலாக திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜவான்
விஜய்யின் பிகில் படத்துக்கு பின்னர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஆகஸ்ட் 7-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
ஜவானுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு பான் இந்தியா படம் தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. இப்படத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நவின் பாலிஷெட்டி நடித்திருக்கிறார். மகேஷ் பாபு இயக்கியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... பெரிய ரோஜாப்பூ டிரஸ்... ஹாட் மூடில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த்!
தமிழ்க்குடிமகன்
இயக்குனர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தமிழ்க்குடிமகன். இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ்.ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணனே தயாரித்தும் உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 7-ந் தேதி திரைகாண உள்ளது. இதோடு தி நன் 2 என்கிற ஆங்கில திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.
ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள்
ஹரிஷ் உத்தமன், ஷீலா நடித்த நூடுல்ஸ், சத்யராஜ் கதையின் நாயகான நடித்த அங்காரகன், மணிபாரதி இயக்கியுள்ள பரிவர்த்தனை, குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி நடித்துள்ள ரெட் சாண்டல்வுட், வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த துடிக்கும் கரங்கள், ஜி சிவா இயக்கி நடித்துள்ள ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா ஆகிய சிறுபட்ஜெட் திரைப்படங்கள் ஆகஸ்ட் 8-ந் தேதி திரைக்கு வர உள்ளன.
இதையும் படியுங்கள்... சரியா இன்னும் 100 நாள் தான் இருக்கு..! கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!