MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • “அதுக்கே 20-25 நாட்கள் ஆனது..” தமன்னா உடனான தனது காதல் கதை குறித்து மனம் திறந்த விஜய் வர்மா..

“அதுக்கே 20-25 நாட்கள் ஆனது..” தமன்னா உடனான தனது காதல் கதை குறித்து மனம் திறந்த விஜய் வர்மா..

தனக்கும் தமன்னாவுக்கும் இடையேயான காதல் கதை எப்படி தொடங்கியது என்பது குறித்து விஜய் வர்மா பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ramya s
Published : Mar 24 2024, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், கல்லூரி படத்தில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

29

நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.மேலும் பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகுபலி 1, பாகுபலி 2 படங்களில் நடித்த தமன்னா தனது நடிப்பின் மூலம் ரசிக்ர்களை ஈர்த்தார்.

39

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் தமன்னா.தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் . 

49

இதனிடையே வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கினார் தமன்னா. அவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை  தொடர்ந்து ஜீ கர்தா, ஆக்ரி சச் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். 

59

அந்த வகையில் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்த போது டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். மேலும் தங்கள் உறவை விஜய் வர்மா - தமன்னா வெளிப்படையாக அறிவித்த பின்னர் இருவரும் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டும் வருகின்றனர். 

69
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

இந்த நிலையில் தங்கள் காதல் கதை எப்படி தொடங்கியது என்பது குறித்து விஜய் வர்மா பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர் “ நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தது லஸ்ட் ஸ்டோரின் படப்பிடிப்பின் போது அல்ல. ஒரு பார்ட்டி நடப்பதாக அப்போது பேச்சு இருந்தது. ஆனால் அது நடக்கவே இல்லை.

 

79

எனவே, நாங்கள் ஒரு பார்ட்டி விரும்பினோம், அதில் 4 பேர் மட்டுமே வந்தனர். அன்று தான் நான் முதன்முதலில் தமன்னாவில் உன்னிடம் அதிகம் பழக விரும்புகிறேன் என்று அவளிடம் சொன்னே. அதன் பிறகு எங்கள் முதல் டேட்டிங் நடக்கவே 20-25 நாட்கள் ஆனது.” என்று தெரிவித்தார்.

89

முன்னதாக ஃபிலிம் கம்பேனியனுக்கு அளித்த பேட்டியில் பேசிய விஜய் வர்மா “நான் ஒரு நடிகையையோ அல்லது திரைத்துறையை சேர்ந்த பெண்ணையோ காதலிக்க மாட்டேன் என்றே நினைத்தேன்., ஏனெனில் நான் சினிமாத்துறை மீது மிகவும் கோபமாக இருந்தேன்.

 

99

ஆனால் நானும் தமன்னாவும் ஒருவொருக்கொருவர் பழக தொடங்கிய போது,  விளையாட்டை அறிந்தவர், வணிகம் தெரிந்தவர், கலை, படைப்பாற்றல், நிதி, திரைப்படத் தயாரிப்பின் அனைத்துப் பக்கங்களையும் புரிந்து கொண்ட ஒருவரைக் கொண்டிருப்பதில் எனக்கு அதிக மதிப்பு கிடைத்தது. அவரின் அனுபவமும் அவரின் நல்ல வேலையும் நல்ல புத்தியும் எனக்கு மிகவும் உதவுகின்றன. அவள் பல விஷயங்களுக்கு முன்னோக்கைக் கொண்டுவருகிறார்.” என்று தெரிவித்தார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved