ரகசியமாக பிரபல கிரிக்கெட் வீரரை 2-வது திருமணம் செய்துகொண்டாரா விஜே ரம்யா? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா பிரபல கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை பின்னணி பற்றி பார்க்கலாம்.
VJ Ramya
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதுதவிர சினிமாவிலும் அவ்வப்போது சின்ன சின்னவேடங்களில் நடித்து வரும் ரம்யா, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன், ஆடை, மாஸ்டர், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Ramya Subramanian
இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அபரஜித் என்பவருடன் திருமணம் ஆனது. திருமணமான ஒரே ஆண்டில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்ட ரம்யா, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். விவாகரத்துக்கு பின் பிட்னஸில் முழு ஈடுபாடோடு இறங்கிய ரம்யா, தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து செம்ம ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
VJ Ramya 2nd marriage rumour
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் ரம்யா குறித்து, சமீபத்தில் ஒரு புகைப்படம் காட்டுத்தீ போல் பரவியது. அந்த புகைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடியாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் ரம்யா.
VJ Ramya, Dinesh karthik viral photo
இந்த புகைப்படத்தை ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தினேஷ் கார்த்திக் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பதாக கேப்ஷன் கொடுத்திருந்தார். யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட இந்த வதந்தியை உண்மை என நினைத்து சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். ஆனால் உண்மையில் தினேஷ் கார்த்திக்கிற்கு தீபிகா என்கிற ஸ்குவாஷ் வீரங்கனையுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரம்யா அவரது இரண்டாவது மனைவி என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் துளியும் உண்மையில்லை.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்தை அடிக்க ஆள் ரெடி பண்ணிய லோகேஷ் கனகராஜ்... சுட சுட வந்த தலைவர் 171 பட வில்லன் அப்டேட்