ரஜினிகாந்தை அடிக்க ஆள் ரெடி பண்ணிய லோகேஷ் கனகராஜ்... சுட சுட வந்த தலைவர் 171 பட வில்லன் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
Thalaivar 171 Movie
தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த ரஜினியின் கெரியர், ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் உச்சத்துக்கு சென்றது. நெல்சன் இயக்கிய அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் கைவசம் தற்போது 3 படங்கள் உள்ளன.
Lal salaam
அதன்படி ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thalaivar 170 movie team
லால் சலாமை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் தான் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மலையாள நடிகர் பகத் பாசில், மலையாள நடிகை மஞ்சு வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தான் லால் சலாம் மற்றும் தலைவர் 170 படங்களை தயாரித்து உள்ளது.
Rajinikanth Thalaivar 171 movie
இதுதவிர ரஜினி கைவசம் உள்ள மூன்றாவது திரைப்படம் தலைவர் 171. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளை அடுத்த 6 மாதத்தில் முடித்து மார்ச் அல்லது ஏப்ரலில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார் லோகி.
Thalaivar 171 villain Raghava Lawrence
இந்த நிலையில், தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் ராகவா லாரன்ஸ் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். இதற்கு முன்னர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டரில் நடிக்க லோகேஷின் பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது லாரன்ஸ் தான். அப்போது மிஸ் ஆன இந்த காம்போ தற்போது தலைவர் 171 படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது.
இதையும் படியுங்கள்... புது சீரியலுக்கு கிடைச்ச வரவேற்புகூட எதிர்நீச்சலுக்கு இல்லையா? டிஆர்பியில் அதளபாதாளத்துக்கு சென்ற எதிர்நீச்சல்