MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jyothika: 27 வருஷம் பாலிவுட் திரையுலகில் இருந்து.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக ஒதுக்கப்பட்டாரா ஜோதிகா?

Jyothika: 27 வருஷம் பாலிவுட் திரையுலகில் இருந்து.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக ஒதுக்கப்பட்டாரா ஜோதிகா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த, ஜோதிகாவுக்கு அறிமுகப்படமே பாலிவுட் என்றாலும் 27 வருடங்கள் ஹிந்தி திரையுலகில் நடிக்காததன் காரணம் என்ன? என்பதை முதல் முறையாக கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : May 10 2024, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

குஷ்பூவுக்கு பின்னர், தன்னுடைய கொழுக்கு மொழுக்கு அழகால் 90'களில் பல ரசிகர்கள் மனதை மயக்கியவர் ஜோதிகா. இவர் தமிழில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'வாலி' படத்தில், சிம்ரன் நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், அந்த சமயத்தில் பாலிவுட் படத்திலும் நடித்து வந்ததால், 'வாலி' படத்தில் இருந்து விலகினார். பின்னர் எஸ்.ஜே.சூர்யா கேட்டுக்கொண்டதற்காக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Jyothika Photos

Jyothika Photos

ஜோதிகா நடிப்பில் வெளியான Doli Saja Ke Rakhna என்கிற பாலிவுட் திரைப்படம் படு தோல்வி அடைந்தாலும்... ஜோவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சில விருதுகளையும் ஜோதிகா பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து முழுமையாக தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

ரஜினி, கமல் 50 லட்சம் சம்பளம் வாங்கிய போது.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

38

தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதே போல் தமிழில் அக்கா நக்மாவை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஓரம் காட்டினார் ஜோதிகா. 
 

48

பிஸியான நடிகையாக இருக்கும் போதே, நடிகர் சூர்யாவை காதலிக்க துவங்கிய ஜோதிகா... பல வருடங்கள் காத்திருந்து, சூர்யாவின் பெற்றோர் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருத்து மொத்தமாக விலகினார் ஜோ. திருமணமான மூன்றே வருடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோ, அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.

திருமணத்திற்கு முன்பே டேட்டிங்.. அவுட்டிங் என காதலருடன் ஊர் சுற்றும் வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!
 

58
suriya and jyotika

suriya and jyotika

பிள்ளைகள் வளர்ந்த உடனே, தன்னுடைய கணவரின் முழு சப்போர்டுடன் மீண்டும் திரையுலகில் நடிக்க துவங்கினார். இவர் ரீ-ஏற்றிக்கொடுத்த '36 வயதினிலே' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை தேர்வு செய்து நடித்த ஜோதிகா, மீண்டும் பாலிவுட் திரையுலகில் நடிக்க பிளான் போட்டு தான் மும்பை சென்றார் என கூறப்பட்டது. 

68

இப்படி வெளியான தகவலை உண்மையாகும் விதமாக, மும்பைக்கு சென்ற ஒரே வருடத்தில் சுமார் 15 கிலோ உடல் எடையை குறைத்து, செம்ம ஃபிட்டாக மாறியது மட்டும் இன்றி, அடுத்தடுத்து பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான சைத்தான் 100 கோடி வசூலை குவித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஸ்ரீகாந்த் படமும் வரவேற்பை பெற்றுவருகிறது. அடுத்ததாக DabbaCartel  என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!
 

78

இந்நிலையில் ஜோதிகா அறிமுமானது ஹிந்தி படமாக இருந்தாலும் ஏன், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது 27 வருடங்களாக தனக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றும், இதன் காரணமாக தென்னிந்திய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதாக கூறியுள்ளார். பாலிவுட் மற்றும் கோலிவுட் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்ததாகவும், தென்னிந்திய படத்தில் நான் நடிக்க துவங்கி விட்டதால் நான் தென்னிந்தியர் என ஒதுக்கி விட்டார்கள். 
 

88
Actress Jyothika

Actress Jyothika

எனினும் தென்னிந்திய பட வாய்ப்புகளை தேர்வு செய்து என் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினேன் அதற்கான அங்கீகாரமும் எனக்கு கிடைத்தது. எப்போதும் நான் ஹிந்தி படங்களை தவிர்த்தது இல்லை. அதே போல் இத்தனை ஆண்டுகள் ஹிந்தியில் எனக்கேற்ற கதை அமையவில்லை. இப்போது தான் அமைந்திருப்பதாக நினைக்கிறேன் என கூறியுள்ளார். 

Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved