MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. அதுவும் இந்த ஹீரோவுக்கு ஜோடியாக..

கோலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. அதுவும் இந்த ஹீரோவுக்கு ஜோடியாக..

STR 48 படத்தில் ஹீரோயினாக நடிக்க 2 பாலிவுட் நடிகைகளுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

2 Min read
Author : Ramya s
Published : May 23 2024, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Actor Simbu

Actor Simbu

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என 3 அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் சிம்பு. பத்து தல படத்தை தொடர்ந்து கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. எனினும் படத்தின் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Simbu

Simbu

சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்டிஆர் 48' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று பல நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

37
simbu

simbu

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும், 90% அதன் பணிகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எஸ்.டி.ஆர் 48 படத்தில் ஹீரோ, வில்லன் என சிம்பு 2 வேறு கெட்டப்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

47
simbu

simbu

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க 2 பாலிவுட் நடிகைகளுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி மகளும் பிரபல நடிகையுமான ஜான்வி கபூர்,  கியாரா அத்வானி ஆகிய பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருஇக்றது.

57

ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் இன்னும் தமிழ் படத்தில் நடிக்கவில்லை. எனவே 'STR 48' படத்தில் அவர்கள் இணைந்தால் இது இரண்டு நடிகைகளுக்கும் கோலிவுட் அறிமுகமாகும், 

67

முதலில், 'STR 48' படத்தில் கீர்த்தி சுரேஷ், மிருணால் தாக்கூர் அல்லது தீபிகா படுகோனே இவர்களில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் கூறப்பட்டது. ஆனால் தற்போது அது கியாரா அத்வானி அல்லது ஜான்வி கபூராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

77

இதனிடையே சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லஃப்ப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார், மேலும் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'எஸ்டிஆர் 48' படத்தின் படப்பிடிப்பு ஜூன் இறுதியில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved