உண்மையில் மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிச்சா ஆபத்தா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?
Milk and Fish : மீன் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் சரும பிரச்சனை வரும் என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செல்வதை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டு இருப்பீர்கள். அது உண்மையா..? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் எவ்வளவு ஆரோக்கியமாக உணவே கடைப்பிடித்தாலும் சில உணவுகளை ஒன்றாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தயிர் ,பால் மாம்பழம் போன்றவற்றை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அப்படிப்பட்ட ஒரு கலவை தான் மீன் மற்றும் பால். ஆம், மீனையும் பாலையும் நன்றாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால்,சரும பிரச்சனைகள் வரும் என்பது பழங்கால நன்மை நம்பிக்கை. இந்த கலவை உண்மையில் தீங்கு விளைவிக்கிறதா.? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மீன் சாப்பிடும்போது பால் குடிப்பது உடலுக்கும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ரீதியாக ஆதாரமும் இல்லை. இருப்பினும் சில வல்லுநர்கள் இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது, ஏதேனும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்குமாம்.
ஆயுர்வேதத்தின்படி, இந்த இரண்டு உணவுகளும் உடலில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை ஒன்றாக சாப்பிடக்கூடாது. எப்படியெனில், பால் இயற்கையில் குளிர்ச்சியாகவும், மீன் சூடாகவும் இருக்கும் தன்மை கொண்டது. எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சமநிலையின்மை உருவாகிறது. இது உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதனால் செரிமானம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வயிற்று வலி, வீக்கம் ஏற்படலாம். ஏனெனில், இவை இரண்டும் புரதத்தின் நல்ல மூலமாகும். குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது மோசமான பாதிப்பு ஏற்படுத்தும்.
விஞ்ஞான கண்ணோட்டத்தில் இந்த கலவையானது மோசமானதல்ல. இருப்பினும் ஆயுர்வேதத்தின் படி இந்த கலவையானது நிச்சயமாக அசெளகரியத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பலருக்கு இந்த கலவை எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.