ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய ரன்வீர் சிங்.. தீபிகாவை முந்திய ஆலியா.. பிரபலங்களின் பிராண்ட் மதிப்பு இவ்வளவா?
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
India's Most Valued Celebrities
பொதுவாக படங்களில் நடிப்பதற்கு உச்ச நட்சத்திரங்கள் கோடிகளில் வாங்குகின்றனர். இதனால் ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் படங்களில் நடிப்பதைத் தவிர, பிராண்டுகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். பிரபலங்களின் நிலையான வருமான ஒரு பிரபலத்தின் பிராண்ட் மதிப்பு அவர்களின் புகழ், அவர்கள் அங்கீகரிக்கும் பிராண்டுகள் அவர்களின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வணிகத்தைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது.
Ranveer Singh Brand Value
இந்த நிலையில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. Kroll's Celebrity Brand Valuation Report 2023 அறிக்கையின் படி, பிரபல பாலிவுட் பிரபலத்தின் பிராண்டு மதிப்பு தற்போது 203.1 மில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1600 கோடி ஆகும். அவர் வேறு யாருமில்லை.. பிரபல நடிகர் ரன்வீர் சிங் தான்.. Tiffany & Co, Zomato, Vicks போன்ற பல பிராண்டுகளுக்கு ரன்வீர் விளம்பரம் செய்கிறார். அவர் தனது சொந்த முதலீடுகளான Bold Care, Sugar Cosmetics போன்றவற்றையும் அங்கீகரிக்கிறார்.
Virat Kohli Brand Value
இந்த பட்டியலின்படி, பட்டியலில் உள்ள மிகவும் பிரபலமான பிரபலம் விராட் கோலி ஆவார், அவரின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1900 கோடி ஆகும்.
Shahrukh Khan Brand Value
விராத், ரன்வீர் சிங்கை தொடர்ந்து பிரபல நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார், கடந்த ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்த ஷாருக்கான். SRK இன் தற்போதைய பிராண்ட் மதிப்பு 120.7 மில்லியன் டாலராகும் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1000 கோடி ஆகும். கடந்த ஆண்டு, ஜவான் மற்றும் பதான் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த ஷாருக்கான், தற்போது Vimal, Myntra, Tide, Everest Spices உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து வருகிறார்.
Akshay Kumar Brand Value
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் அக்ஷய் குமார் உள்ளார். அவரின் பிராண்ட் மதிப்பு 111.7 மில்லியன் டாலாராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 931 கோடியாகும். அவர் Dabur, Kajaria போன்ற பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்கிறார். மேலும் தனது சொந்த ஆடை பிராண்டான Force IX ஐயும் வைத்திருக்கிறார், மேலும் அதை தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறார்.
Alia Bhatt Brand Value
இந்த பட்டியல் ஆலியா பட் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவரது பிராண்ட் மதிப்பு 101.1 மில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 848 கோடி. Cadbury, Make My Trip போன்ற பிராண்டுகளுக்கு ஆலியா விளம்பரம் செய்து வருகிறார். மேலு அவர் தனது சொந்த பிராண்டான Ed-a-Mamma நிறுவனத்தின் முகமாகவும் உள்ளார்.
Deepika Padukone Brand Value
தீபிகா படுகோன் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார். அவரின் பிராண்ட் மதிப்பு 96 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ஆகும். Dyson, Cadbury, Make My Trip, Pottery Barn, Cartier, Louis Vuitton, போன்ற பிராண்டுகளுக்கு அவர் விளம்பரம் செய்து வருகிறார். மேலும் தீபிகா தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டான 82E இன் முகமாகவும் இருக்கிறார்.
Amitabh Bachan Brand Value
கிரிக்கெட் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர், அமிதாப் பச்சன் இந்த பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளனர். பிரபல பிராண்ட் மதிப்பு 83.6 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 696 கோடி. அவர் First Cry, Kalyan Jewelers, Everest Spices போன்ற பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து வருகிறார்.
Salman Khan Brand Value
இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் 10-வது இடத்தில் இருக்கிறார். அவரின் பிராண்ட் மதிப்பு 81.7 மில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 680 கோடி. அவரது சொந்த பிராண்டு ஆடைகள் மற்றும் வாசனை திரவியங்களுக்கும் அவர் விளம்பரம் செய்து வருகிறார்.