- Home
- Gallery
- “மசூதிகளை தோண்டினால் கோயில்கள் கிடைக்கும், ஆனா கோயில்களை தோண்டினால்..” பிரகாஷ் ராஜ் கருத்தால் சர்ச்சை..
“மசூதிகளை தோண்டினால் கோயில்கள் கிடைக்கும், ஆனா கோயில்களை தோண்டினால்..” பிரகாஷ் ராஜ் கருத்தால் சர்ச்சை..
ராமர் கோயில் திறப்பு குறித்து பிரகாஷ்ராஜ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash Raj
நடிகர் இயக்குனர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபகாலமாகவே அவர் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அந்த வகையில் ராமர் கோயில் திறப்பு குறித்து பிரகாஷ்ராஜ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prakash Raj
அந்த வீடியோவில் பேசி உள்ள அவர், மசூதிகளை தோண்டினால் கோயில்கள் கிடைக்கும் என்றால், கோயில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்
Actor Prakash Raj Tweet
அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் தொல்லியல் துறை ஆய்வு செய்த போது அங்கு ராமர் மற்றும் அனுமன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனை அடிப்படையாக வைத்தே பாபர் மசூதி வழக்கில் இருதரப்புக்கும் சாதகமாக தீர்ப்பளித்தது.
இதே போல் வாரணாசி ஞானவாபி மசூதியும் கோயிலை இடித்து கட்டப்படதாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்தும் வழக்கு தொடரப்பட்டன. இதை தொடர்ந்து வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரனாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த சூழலில் தான் பிரகாஷ் ராஜ் அயோத்தி ராமர் கோயில் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் நாம் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் இதையெல்லாம் செய்கின்றனர் என்றும் பாஜகவை அவர் சாடி உள்ளார். ஆனால் அவரை சமூக வலைதளங்களில் பாஜகவினர் கடுமையாக விமரிச்த்து வருகின்றனர்.