தினமும் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. .
நடைபயிற்சி மேற்கொள்ளும் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்று நடைபயிற்சி. உங்கள் உடற்பயிற்சி முறையை மீண்டும் தொடங்க நினைத்தால், அதற்கு நடைபயிற்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். இதய ஆரோக்கியத்திற்கும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது 10000 படிகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர்.
Walking 10000 steps everyday
உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது ஒரு நல்ல பழக்கமாகும். இருப்பினும், நடைபயிற்சி விதிகளை ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும். நடைபயிற்சியில் நமக்கு தெரியாமலே நாம் செய்யும் தவறுகள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே ஒருவர் நடைபயிற்சி மேற்கொள்ளும் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்தவொரு உடற்பயிற்சியிலும் காலணி முக்கிய பங்கு வகிக்கிறது. நடைபயிற்சி காலணிகள், தசை வலி முழங்கால் மற்றும் கணுக்கால் பிரச்சினைகள் தவிர்க்க உதவுகிறது. எனவே. சரியான ஷூ அணியவில்லை எனில் காலில் காயங்கள், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நடைபயிற்சிக்கு செல்லும் முன்பு நடைபாதை காலணிகளை எப்போதும் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நடக்கும் தோரணை மிகவும் முக்கியம். ஆனால் பெரும்பாலானோர் இதில் கவனம் செலுத்துவதில்லை. கால் வைப்பு, முதுகு மற்றும் தோள்பட்டை தோரணை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, முதுகை நேராக வைத்து நடக்க வேண்டும். தோள்பட்டையை அகலமாக வைத்து நடக்க வேண்டும். மேலும் குனியாமல் நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும்.
எந்தவொரு உடற்பயிற்சிக்கு முன் இந்த இரண்டு விஷயங்கள் அவசியம். நிபுணர்கள் எப்போதும் நடைபயிற்சி முன் ஒரு முறையான வார்ம் அப் மற்றும் கூல் டவுன் முயற்சியை பரிந்துரைக்கின்றனர். வார்ம் அப் தசைகளை தளர்த்த உதவுகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் உடற்பயிற்சிகள் மற்றும் நீட்டிப்புகளுக்கு தசைகளை தயார்படுத்துகிறது. மறுபுறம், கூல்-டவுன் தசை வலியைக் குறைக்க உதவுகிறது, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் மீட்பு செயல்முறையை மேம்படுத்துகிறது.
நடைபயிற்சி ஒருவர் கைகளை இறுக்கமாகவும், பக்கவாட்டாகவும் வைத்திருக்கக் கூடாது. இது வேகத்தை குறைத்து உடலின் சமநிலையை சீர்குலைக்கலாம். குறிப்பாக. நடக்கும்போது கைகளின் அசைவு இயற்கையானது மற்றும் அவசியமானது.
நடக்கும்போது கை சரியான முறையில் அசைவதை உறுதிசெய்ய முயற்சிக்கவும். இந்த சிறிய தவறுகளை தவிர்ப்பதன் மூலம் நடைபயிற்சியின் நன்மைகளை முழுமையாக பெற முடியும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.