Black Thread : நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு இது தான் காரணமா? இதில் இவ்வளவு நன்மைகளா?
பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது ஏன் கருப்பு கலரில் கயிறு கட்டுகின்றனர் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Black thread on feet
கண் திருஷ்டியை தடுக்க சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது, போலவே காலில் கருப்புக்கட்டுவதும் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு நடைமுறை தான். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவது வழக்கம். பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது ஏன் கருப்பு கலரில் கயிறு கட்டுகின்றனர் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Black Thread
பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய 3 பொருட்களையும் கயிறு போல் திரித்து கட்டுவதால் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இந்த பொருட்களும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. மேலும் நவ கிரகங்களின் கதிர்வீச்சை ஈர்க்கும் தன்மை கொண்டது. கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.
கருப்பு நிறம் சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டது. எனவே கருப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக இருக்கும் நோய், உடல் நலக்கோளாறு ஆகியவை குணமாகும்.
நமது உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன். இதில் ஒவ்வொரு முடிச்சும் உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் ஒழுங்குப்படுத்துகின்றன.
அந்த வகையில் நமது உடலின் கணுக்கால் பகுதி, முக்கியமான முடிச்சு பகுதியாகும். கணுக்காலில் கயிறு கட்டுவதன் மூலம் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரி நேர்க்கோட்டில் இருக்கும். ஜோதிடத்தின் படின் கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
Why do people wear black thread- Know the mythological reason behind it
சனி பகவான் முதலில் ஒருவரின் காலை தான் பிடிப்பாராம். எனவே பணப்பிரச்சனை இருப்பவர்கள் சனி பகவானை வேண்டி 9 முடிச்சுகள் போட்டு காலில் கட்டுவதால் நிதி பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
benefits of wearing black thread 03
மேலும் கணுக்காலில் கருப்புக்கயிறு கட்டுவதால் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்தியில் இருந்து உங்களை விலக்கி வைப்பதுடன் பாதுகாப்புடன் உணர வைக்குமாம். எனினும் எல்லா ராசிக்காரர்களும் கருப்பு கயிறை கட்டக்கூடாதாம். தனுசு, துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரகள் கருப்பு கயிறை காலில் கட்டினால் நல்லதாம். அதே நேரம் விருச்சிகம், மேஷம் போன்ற ராசிக்காரர்கள் இந்த கயிறைக் கட்டக் கூடாதாம்..