School Student : இனி அரசு பள்ளிகள் காலை 9.15க்கு தொடங்கும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
ஆகஸ்ட் 7ம் தேதி முதல் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Government School
புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து அரசு பள்ளிகளில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 9 மணி முதல் 9.15 வரை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
Puducherry School
முதல் பாட வேளை 9. 15 முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாடவேளை 10 மணி முதல் 10.45 மணி வரையும், 10.45 முதல் 10.55 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை என தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக காலை 10.55 முதல் 11. 40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும், மதியம் உணவு இடைவேளையாக 12. 25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வரும் திங்கட்கிழமை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
Puducherry Government School Student
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும், 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்திருந்தது. காலை நேரத்தில் ஒரு பாட பிரிவின் நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
School Education Department
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மீண்டும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி காலை 9.15 மணி முதல் 9.30 மணி வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து முதல் பாட வேளை 9.30 முதல் மதியம் 12.25 வரை மூன்று பாட வேளைகள் நடைபெறும். காலை 11 முதல் 11.10 வரை இடைவேளை விடப்படும். பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.40 முதல் 1.30 வரை 50 நிமிடங்கள் இடைவேளை விடப்படும். மதியம் 1.30 முதல் மாலை 4.20 வரை 4 பாடவேளைகள், மதியம் 2.50 முதல் 3 மணி வரை இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.