Chapter 3 வருவது உறுதி.. யாஷ் தான் ஹீரோ.. ஆனா.. - KGF படம் குறித்த அப்டேட் சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல்!
Actor Yash KGF 3 Update : பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கே.ஜி.எப் படங்களின் இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்ப்பை பெற்ற படங்களாக மாறியது.
Actor Yash
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கன்னடத்திரை உலகில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் யாஷ். இவர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ராக்கி என்கின்ற திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது என்றே கூறலாம்.
KGF Movie
கடந்த 16 ஆண்டுகளாக கன்னட திரை உலகில் பயணித்து வரும் நடிகர் யாஷ் அவர்களுக்கு ஒரு சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக மாறியது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கேஜிஎப் திரைப்படம் அவரை கன்னட திரை உலகை தாண்டி இந்திய சினிமா உலகிற்கு அடையாளம் காட்டியது.
KGF 3 Update
அதனை எடுத்து மீண்டும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தை யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீர் இயக்க அதுவும் வெற்றிப்படமாக மாறிய நிலையில் மூன்றாம் பாகத்திற்கான ஒரு சிறிய லீட் அந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசி உள்ள பிரபல இயக்குனர் பிரசாந்த் நில், அந்த திரைப்படம் உருவாவது உறுதி தான் என்றும் நிச்சயம் யாஷ் அந்த படத்தில் நடிப்பார் என்றும் உறுதி அளித்துள்ளார்.
அதற்கான கதை ஏற்கனவே தயாராக உள்ள நிலையில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரே அந்த திரைப்படத்தை இயக்கவும் உள்ளதாக கூறியுள்ளார். தற்பொழுது சலார் பட பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பட பணிகளை முடித்துவிட்டு நடிகர் யாஷ் அவர்களுடன் இணைந்த அந்த படத்தில் பணியாற்றுவார் பிரஷாந்த் என்று கூறப்படுகிறது.