கோலிவுட்டை கலக்கிய டாப் ஹீரோயின்ஸ் தான் - ஆனா இவங்க எல்லாம் தலைவர் கூட நடிச்சதேயில்லை! யார் அவர்கள் தெரியுமா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் மாபெரும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை 169 திரைப்படங்களில், பல்வேறு நடிகர் நடிகைகளுடன் அவர் இணைந்து நடித்துள்ளார்.
Suganya
ஆனால் புகழின் உச்சியை தொட்டு, முன்னணி நாயகியாக வலம் வந்த சிலர், சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை இன்றளவும் பெறவில்லை என்று தான் கூறவேண்டும். இதில் முதன்மையானவர் சுகன்யா, 80கள் முதல் 90களின் முடிவு வரை கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சுகன்யா, தற்பொழுது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Urvasi
ஊர்வசி, இவரும் கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் அன்று தொடங்கி இன்று வரை இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்ததில்லை.
Devayani
தேவயானி, 90களில் பிரபலமாக இருந்த ஒரு முன்னணி நடிகை இவர் என்றால் அது மிகையல்ல. விஜய், அஜித் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள தேவயானி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்ததில்லை. அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெறாதது பெரும் வருத்தமளிக்கிறது என்று பல முறை அவர் கூறியுள்ளார்.
Actress Sneha
சினேகா, தற்பொழுது பிரபல நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருக்கும் நடிகை சினேகா, கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இருக்கின்ற அத்தனை முன்னணி நாயகர்களுடனும் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் இன்றளவும் அவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்ததில்லை.
Asin
அசின், தொழிலதிபரை மணந்து தற்போது பக்காவாக செட்டில் ஆகிவிட்ட நடிகை. அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகை இவர், உலக நாயகன் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். தல அஜித், தளபதி விஜய், விக்ரம் தொடங்கி ஜெயம் ரவி வரை இவரும் தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்திருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தவிர.
ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியாம்