தனுஷின் சூப்பர் ஹிட் பாட்டு.. ஆனா அது நான் விக்ரமிற்கு போட்ட மெட்டு - ட்ராப்பான படம் குறித்து பேசிய GVP!
Vikram and Selvaragavan Movie : பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் அண்மையில் பேசிய பேட்டி ஒன்றில் தனது இசையில் உருவாகவிருந்து பின் கைவிடப்பட்ட படம் குறித்து பேசியுள்ளார்.
Aayirathil Oruvan
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி, பல ஆண்டுகள் கழித்து மக்கள் பெரிய அளவில் கொண்டாடிய திரைப்படம் தான் "ஆயிரத்தில் ஒருவன்". அதே போல இந்த திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தில் அடுத்த பரிமாணத்திற்கு சென்றவர்தான் இளம் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார்.
Vikram and Selvaraghavan Movie
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் செல்வராகவும் இயக்கத்தில் தனது இசையில் உருவாக இருந்த மற்றொரு திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அந்த திரைப்படத்தின் பெயர் "சிந்துபாத்" என்றும், பிரபல நடிகர் விக்ரம் அவர்கள் தான் அந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விருந்தார் என்றும் ஜி.வி பிரகாஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
Mayakkam enna
அந்த படத்தின் பாடல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது உருவாக்கப்பட்ட மெட்டு தான் "நான் சொன்னதும் மழை வந்துச்சா" என்கின்ற அந்த பாடல். ஆனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய "மயக்கம் என்ன" என்கின்ற திரைப்படத்தில் நானும் யுவன் சங்கர் ராஜாவும் அந்த பாடலை பயன்படுத்தினோம் என்று அவர் கூறியுள்ளார்.