- Home
- Gallery
- “ராசாவே உன்ன காணாத நெஞ்சு” பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்களோட மகளும் பிரபல ஹீரோயின் தான்..
“ராசாவே உன்ன காணாத நெஞ்சு” பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்களோட மகளும் பிரபல ஹீரோயின் தான்..
வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரமிளா ஜோஷாயின் மகளும் பிரபல ஹீரோயின் தான்.. அவர் யார் தெரியுமா?

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். விஜகாந்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் விஜயகாந்த், ரேவதி, பிரமிளா ஜோஷ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் கர்நாடகாவை சேர்ந்த பிரமிளா ஜோஷாய்.
ரஜினிகாந்த், சரிதா நடிப்பில் வெளியான தப்பு தாளங்கள் படத்திலும் இவர் நடித்திருந்தாலும்,வைதேகி காத்திருந்தாள் படத்தில் இவர் ஏற்று நடித்த வைதேகி கதாப்பாத்திரம் மூலம் இவர் பிரபலமானார்.
இளையராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்து பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. குறிப்பாக ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல் இன்றளவும் எவர்க்ரீன் பாடலாக நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதே போல் இந்த பாடலில் பெண் வெர்ஷனான ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலும் ஹிட்டானது.
இந்த படத்தை தொடர்ந்து பிரமிளாவுக்கு கன்னட பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
நடிகை பிரமிளா ஜோஷாயின் மகள் நடிகை மேக்னா ராஜ். தமிழ், கன்னடம் தெலுங்கும், மலையாள உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் மேக்னா ராஜ்,. பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை மேக்னா திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறந்த போது மேக்னா கர்ப்பிணியாக இருந்தார். இதை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரபல நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் தான் சிரஞ்சீவி சார்ஜா என்பது குறிப்பிடத்தக்கது.