தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம்.. ஆனா அவர் கேமியோ மட்டும் தான் பண்ணப்போறாராம் - அப்போ ஹீரோ யாரு?
Director Dhanush Next Movie : பிரபல நடிகர் தனுஷ் இப்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழி திரைப்படங்களை தனது லைன் அப்பில் வைத்திருக்கும் ஒரு முன்னணி நடிகராக விளங்குகிறார் என்றால் அது சற்றும் மிகையல்ல.
Dhanush 50
தற்பொழுது தனது 50வது திரைப்படத்தை இயக்கி, எழுதி மற்றும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு தெலுங்கு திரை உலகின் பிரபலமான இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ள தனுஷ், வெற்றிமாறன் மற்றும் நெல்சன் இயக்கத்திலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் அப்போது வெளியாகி வருகின்றது.
Sekhar Kammula
இந்நிலையில் ஏற்கனவே பா. பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட நடிகர் தனுஷ், தற்பொழுது தனது ஐம்பதாவது திரைப்படத்தையும் இயக்கி வரும் நிலையில், பிரபல கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்கின்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
Varun
இருப்பினும் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு கேமியோ கதாபாத்திரம் மட்டுமே ஏற்று நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷ் அவர்களுடைய உறவினர் வருண் கதையின் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வருண் ஏற்கனவே இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் உருவான "மல்லுக்கட்டு" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆகவே வருண் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D