ஒருவழியா தகவல் வந்துருச்சு.. களமிறங்கும் பாலா - அருண் விஜய் நடிப்பில் வணங்கான் - First Look அப்டேட் இதோ!
பிரபல திரைப்பட இயக்குனர் பாலா அவர்களுடைய இயக்கத்தில், பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் வணங்கான். கடந்த சில மாதங்களாக இந்த படம் குறித்த எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், இப்பொது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Suriya Vanangaan
பிதாமகன் என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இணைப்பில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் இந்த வணங்கான். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி சூர்யா அவர்களே இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal And Shruthihaasan: அப்பா கமல்ஹாசனுடன் இணையும் ஸ்ருதிஹாசன்! உருவாகும் புதிய படைப்பு.!
Suriya and Bala
சூர்யாவின் 41வது திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும், தன்னுடைய 2D நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிடும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வணங்கான் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது, மேலும் கீர்த்தி செட்டி படத்தின் நாயகியாக களமிறங்கவிருந்தார்.
Actor Suriya
ஆனால் இந்த சூழ்நிலையில் தான் சூர்யா மற்றும் பாலா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் சென்ற ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த படத்தை சூர்யா கைவிட்டு நிலையில் மீண்டும் அதே மார்ச் மாதம் இந்த 2023ம் ஆண்டில் சூர்யாவுக்கு பதிலாக அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது.
First Look Vanangaan
ஆனால் மார்ச் மாதம் கடந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் First Look போஸ்டர் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.