- Home
- Gallery
- இன்று ரூ.250 கோடி சம்பளம்.. ஆனா ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இன்று ரூ.250 கோடி சம்பளம்.. ஆனா ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினி முதன் முதலில் ஹீரோவாக நடித்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

Rajini
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். .
தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார்.
அதன்படி ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்திற்கு ரஜினி ரூ.150 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்திற்கு ரூ.260 முதல் ரூ.280 கோடி வரை ரஜினி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ரஜினி முதன் முதலில் ஹீரோவாக நடித்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? 1975-ம் ஆண்டு வெளியான பைரவி படம் ரஜினியின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக மாறியது. இந்த படத்தில் தான் முதலில் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரூ.50,000 மட்டுமே ரஜினி சம்பளம் வாங்கினாராம்.
இதுகுறித்து நடிகர் ரஜினியே ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார். அதில் பேசிய ரஜினி “ நான் ஹீரோவாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. வில்லன் கேரக்டரில் மட்டுமே நான் நடித்துக் கொண்டிருந்தேன். பஸ் கண்டக்டராக இருந்த நான் ஒரு நடிகராக மாறியதே எனக்கு மிகப்பெரிய விஷயம்.. நான் ஸ்கூட்டர் வைத்திருந்த போதே மகிழ்ச்சியாக இருந்தேன். அப்போது சிறிய ஃபிளாட் வாங்க திட்டமிட்டேன்.
Rajinikanth
41 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞானம் அவர்கள் என்னை சந்தித்தார். அது வில்லன் கேரக்டராக இருக்கும் என்று நினைத்து, அதில் நடிக்க மறுத்துவிட்டேன். மேலும் 50,000 சம்பளம் வேண்டும் என்றும் கேட்டேன். அது வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு அதை விட குறைவாகவே சம்பளம் வாங்கினேன். அப்போது தான் அவர் என்னை திரும்பவும் அணுகமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக அவர் அடுத்த நாளே ரூ.5000 அட்வான்ஸ் உடன் என்னிடம் வந்தார். பைரவி படத்திற்காக என்னை ஒப்பந்தம் செய்தார்” என்று தெரிவித்தார்.