MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அயலானை விட டபுள் மடங்கு வசூல்... பொங்கல் ரேஸில் கெத்து காட்டிய கேப்டன் மில்லர் - முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

அயலானை விட டபுள் மடங்கு வசூல்... பொங்கல் ரேஸில் கெத்து காட்டிய கேப்டன் மில்லர் - முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jan 13 2024, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Captain Miller

Captain Miller

தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ளா. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

24
captain miller Pongal Release

captain miller Pongal Release

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் உடன் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் வெளியாகி இருந்தது. இதில் இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால் பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றிகிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... Captain Miller Review: தனுஷின் 'கேப்டன் மில்லர்' மாஸ் காட்டியதா? டென்ஷன் ஆக்கியதா.! விமர்சனம்

34
captain miller Box Office

captain miller Box Office

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம், முதல் நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. ஆனால் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அயலான் திரைப்படம் ரூ.4 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இதன்மூலம் அயலானை விட டபுள் மடங்கு வசூலை வாரிக்குவித்து பொங்கல் ரேஸில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது தனுஷின் கேப்டன் மில்லர்.

44
Captain Miller Day 1 Collection

Captain Miller Day 1 Collection

ஆனால் தனுஷின் முந்தைய படங்களை விட கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் கம்மி தான். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாத்தி. அப்படம் முதல் நாளில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்து இருந்தது. ஆனால் அதோடு ஒப்பிடுகையில் கேப்டன் மில்லரின் முதல் நாள் கலெக்‌ஷன் கம்மி தான். இருப்பினும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் கேப்டன் மில்லர் வசூலில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அயலானுக்காக ஒரு ரூபா கூட வாங்காத SK... ஆனா தனுஷ் அப்படி இல்ல - கேப்டன் மில்லருக்காக வாங்கிய சம்பளம் இவ்வளவா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved