விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு.! அர்ஜூன் சம்பத்திற்கு அபராதம் விதித்த கோர்ட்- எவ்வளவு தெரியுமா.?
நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற வழக்கில் அர்ஜூன் சம்பத்திற்கு 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
vijay sethupathi
விஜய்சேதுபதி மீது தாக்குதல்
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையில் தனது உதவியாளரோடு சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடந்து சென்ற விஜய் சேதுபதியை அந்த நபர் பின்னால் வந்து எட்டி உதைத்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
vijay sethupathi attacked
விஜய் சேதுபதியை தாக்கியது ஏன்.?
இந்தியாவையும் முத்துராமலிங்க தேவரையும் விஜய் சேதுபதி விமர்சித்தார். இதன் காரணமாகவே உதைத்தேன் என அந்த நபர் கூறியிருந்தார். இதனால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவிட்டிருந்தார். மேலும் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு
இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் அவரை தாக்க முயன்ற நபருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு வழங்கப்படும் என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அர்ஜூன் சம்பத்திற்கு அபராதம்
இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்ஜூன் சம்பத்திற்கு 4000ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.