Vegetables : குறைந்த காய்கறி விலை மீண்டும் அதிகரித்ததா.? கோயம்பேட்டில் வெங்காயம் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
காய்கறிகளின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி, வெண்டைகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.
குறைந்தது தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 120க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது