- Home
- Gallery
- அச்சச்சோ... அம்புட்டும் பொய்! என் பேருல மோசடி நடக்குது ஏமார்ந்துடாதீங்க! சிங்கம்புலி வெளியிட்ட வீடியோ!
அச்சச்சோ... அம்புட்டும் பொய்! என் பேருல மோசடி நடக்குது ஏமார்ந்துடாதீங்க! சிங்கம்புலி வெளியிட்ட வீடியோ!
நடிகர் சிங்கம்புலி தனது பெயரில் மோசடி செய்து சிலர் பணம் பறிப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், தன்னுடைய எதார்த்தமான காமெடி மூலம் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் சிங்கம் புலி. அஜித், சூர்யா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். அதே போல் பல ஸ்மால் பட்ஜெட் படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். கடந்த வாரம், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ’அரண்மனை 4’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிங்கம் புலி.
பொதுவாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காத பிரபலமாக இருக்கும் இவர், அதிர்ச்சி தரும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு அவர் உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் உதவி செய்யவும் என்றும் சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் ஒன்று உலா வருகிறது.
எனக்கு உடல்நலம் இல்லை என்பது முழுக்க முழுக்க பொய், நான் நன்றாக தான் இருக்கிறேன், நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, எனவே இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்’. உங்களுக்கு என்னை பற்றி தகவல் தெரியவேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் யாரிடமும் பணம் வாங்கும் நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே இது போல் பல பிரபலங்கள் தங்களின் பெயரை பயன்படுத்தி, சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள நிலையில், சிங்கம் புலியும் இதுபோன்ற தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.