- Home
- Gallery
- அம்மாவை விட உயரமா வளர்ந்துட்டாங்களே.. அழகிலும் அப்படியே மம்மி தான் - மகள்கள், மகன் மற்றும் கணவரோடு ரம்பா!
அம்மாவை விட உயரமா வளர்ந்துட்டாங்களே.. அழகிலும் அப்படியே மம்மி தான் - மகள்கள், மகன் மற்றும் கணவரோடு ரம்பா!
Actress Ramba Family : நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் தனது வீட்டில் நடந்த விஷேச புகைப்படங்களை இப்பொது பகிர்ந்துள்ளார்.

Actress Rambha
ஆந்திராவில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்க துவங்கி அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக மாறியவர் தான் ரம்பா. இவர் தெலுங்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Actress Rambha family photos
தெலுங்கு திரை உலகில் இவர் அறிமுகமான அடுத்த ஆண்டே தமிழ் திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபு அவர்களுடைய "உழவன்" என்கின்ற திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம்.
Actress Rambha family
1996 ஆம் ஆண்டு தமிழில் நாயகியாக ரம்பா அறிமுகமான திரைப்படம் தான் "உள்ளத்தை அள்ளித்தா", இந்த திரைப்படம் இயக்குனர் சுந்தர் சி-யின் திரை வரலாற்றில் மிகப்பெரிய ஹீட்டான திரைப்படங்களில் ஒன்றாகும்.
Kollywood Actress Rambha family
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த ரம்பா, கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அந்த ஆண்டே தனது திரைப்பட வாழ்க்கைக்கும் அவர் குட் பை சொன்னார்.
Women Directors: சோதனைகளை கடந்து... தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை தூண்களாக மாறிய பெண் இயக்குனர்கள்!