Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்னைக்கு இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடையாம்.!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்:
டி.ஐ. சைக்கிள் வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம் மேனாம்பேடு ஒரகடம், காந்தி மெயின் ரோடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர், புதூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி:
தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை காந்தி தெரு, பாரதியார் தெரு, திருமலை தெரு, செந்தில் ஆண்டவர் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி 7 மற்றும் 8வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசர்பாடி:
மாத்தூர் மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் காலேஜ் ரோடு, பாயசம்பாக்கம், தனலட்சுமி நகர், எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்புகள், காமராஜ் சாலை மற்றும் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.