ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி..!
சென்னை மதுரவாயல் அருகே பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்ஷன் (4). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சிறுவன் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6-ம் தேதி ரக்ஷன் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- டெங்கு வைரஸ் உருமாறுகிறதா? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன?
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- Dengue Fever : டெங்கு காய்ச்சல்; பப்பாளி இலைகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க! காரணம் இதோ..!!
சிறுவன் உயிரிழப்பிற்கு அப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடே காரணம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி சிறுவனின் உடலை வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- குழந்தைகளிடையே அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டியவை என்ன?