- Home
- Gallery
- மிகப்பெரிய பிளாப் படங்கள்.. ரூ.1300 கோடி நஷ்டம்.. ஆனா இன்றும் சூப்பர்ஸ்டார்.. ஷாருக்கான், அமீர்கான் இல்ல..
மிகப்பெரிய பிளாப் படங்கள்.. ரூ.1300 கோடி நஷ்டம்.. ஆனா இன்றும் சூப்பர்ஸ்டார்.. ஷாருக்கான், அமீர்கான் இல்ல..
பிரபல உச்ச நடிகர் ஒருவர் பல பிளாப் படங்களை கொடுத்தாலும், தற்போதும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். அவர் யார் தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நடிகரின் வெற்றி என்பது அவர் எத்தனை பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பதை வைத்தே வரையறுக்கப்படுகிறது.. அதனால்தான், சில சமயங்களில், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படங்களை கொடுக்க தவறவிடும் போது, உச்ச நடிகர்களின் நட்சத்திர மதிப்பு அடிபடுகிறது. இருப்பினும், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டார், பல பிளாப் படங்களை கொடுத்தாலும், அவர் தற்போதும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
அவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான். கடந்த 30 ஆண்டுகளாக, அக்ஷய் குமார் நாட்டின் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.. 2007-17 வரையிலான 10 வருட காலப்பகுதியில், பல வெற்றிகளை வழங்கி, இந்தியாவில் அதிக வசூல் செய்த நடிகராக இருந்தார்.
ஆனால் அதே நேரம் சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
1991-2024 வரை அக்ஷய் குமாரின் பிளாப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1300 கோடியை இழந்துள்ளன, இது மற்ற எந்த இந்திய நடிகரையும் விட அதிகம். இந்த இழப்புகளின் பெரும்பகுதி கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக சாம்ராட் பிருத்விராஜ் படத்தால் சுமார் ரூ.170 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் 300 கோடி பட்ஜெட்டில் உருவான படே மியான் சோட் மியான் படம் வெறும் 40 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக மாறியது. இந்த படத்தின் மூலம்ம் ரூ.260 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்ஃபி, ராம் சேது, ஜோக்கர், ஜானி துஷ்மன் மற்றும் அஃப்லடூன் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தன. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் அக்ஷய் குமாரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 7000 கோடிக்கு மேல் சம்பாதித்த வெற்றி படங்களாக உள்ளன. இதனால் அக்ஷய் குமாரின் நட்சத்திர மதிப்பு பாதிக்கப்படாமல் உள்ளது.
கடந்த ஆண்டு அக்ஷய் குமார் OMG 2 போன்ற பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்களில் நடித்திருந்தார். இது உலகளவில் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. . இந்த தொடர்ச்சியான வெற்றிகள் அவரை வேறு சில பெரிய படங்களுக்குத் தலைமை தாங்க உதவியது.
சிங்கம் அகெய்ன், வெல்கம் டு தி ஜங்கிள், ஸ்கை ஃபோர்ஸ், சர்ஃபிரா என பல படங்களை அக்ஷய் குமார் கைவசம் வைத்திருக்கிறார்.. ஹீரா பெரி 3 மற்றும் ஜாலி எல்எல்பி 3 உள்ளிட்ட தனது வெற்றி படங்களின் தொடர்ச்சி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அக்ஷய் குமார் வெற்றி நடிகராக தொடர வாய்ப்புள்ளது. அக்ஷய் குமார் தமிழில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் 2-வது பாககாக உருவான 2.0 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.