சோலி முடிஞ்சு.. உடையும் இந்தியா கூட்டணி.. இளம் தலைவருக்கு பாதிப்பு: பிரபல நாடி ஜோதிடர் பாபு கணிப்பு !!
பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி குறித்து பிரபல ஜோதிடர் பாபு கணித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள நாடு முழுக்க 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. இவைகளில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றது.
கடைசியாக மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தேஜஸ்வி யாதவ் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் புகழ் பெற்ற நாடி ஜோதிடர் பாபு ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “வட இந்தியாவில் ஒரு இளம் அரசியல் தலைவரால் பெரும்பிரச்னை ஏற்படும். அவரால், இந்தியா கூட்டணி பிளவு படும். இருமாநிலங்களிளுக்கு இடையே ஏற்படும் பிரச்னையால் சில இடங்களில் கடையடைப்பு நடைபெறும்.
அதேபோல இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும். சென்னையில் அதன் பாதிப்பு பெருமளவில் இருக்காது. கடலோரப்பகுதிகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். ஆந்திராவுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். தமிழ்நாட்டில் நீர்ப் பஞ்சம் வர வாய்ப்புண்டு.
மேலும், இளம் வயதுடைய அரசியல்வாதிக்கு தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட்டு, பெரியளவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு” இருப்பதாக கூறியுள்ளார். ஜோதிடர் பாபு கூறுவது காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியை தான் குறிப்பிட்டுள்ளார் என்று ஊகங்கள் கிளம்பியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!