MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்க முடியாத சோகத்தில் இப்படி ஆகிட்டாரா? சரவண விக்ரமின் நியூ லுக்கை பார்த்து ஷாக் ஆன Fans

பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்க முடியாத சோகத்தில் இப்படி ஆகிட்டாரா? சரவண விக்ரமின் நியூ லுக்கை பார்த்து ஷாக் ஆன Fans

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட சரவண விக்ரமின் புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
saravana vickram

saravana vickram

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சண்டைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த இந்த சீசனில், அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ,50 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கார் வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளர்களில் சரவண விக்ரமும் ஒருவர். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார்.

24
Bigg Boss contestants

Bigg Boss contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, இவர் தன்னைத் தானே டைட்டில் வின்னர் என கூறிக்கொண்டு சுற்றியதை நோட் பண்ணிய ரசிகர்கள், அதை வீடியோவாக எடிட் செய்து ட்ரோல் செய்தனர். இந்த தகவல் நாளடைவில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் மூலம் உள்ளே இருப்பவர்களுக்கும் தெரியவந்து அவர்களும் சரவண விக்ரமை டைட்டில் வின்னர் எனக் கூறி கலாய்க்க தொடங்கினர்.

இதையும் படியுங்கள்... இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... வாடிவாசலை விட்டு வெளியேறும் சூர்யா? வெற்றிமாறனின் நெக்ஸ்ட் சாய்ஸ் இவரா?

34
biggBoss saravana vickram

biggBoss saravana vickram

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறும் முன்னர் ரசிகர்களின் நன் மதிப்பை பெற்ற சரவண விக்ரம், பின்னர் இறுதி வாரத்தில் மாயாவின் புல்லி கேங் உடன் சேர்ந்து அரட்டை அடித்ததை பார்த்து அவர் பச்சோந்தி போல் நடந்து கொள்வதாக விமர்சித்தனர். அந்நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னரும் மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா, நிக்சன் ஆகியோருடன் சேர்ந்து ஜாலியாக அவுட்டிங் சென்று வருகிறார் சரவண விக்ரம்.

44
saravana vickram new look photos

saravana vickram new look photos

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சோசியல் மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த அவர், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தலை முடியை அதிகம் வளர்த்து. அடர்த்தியான தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் டைட்டில் கிடைக்காத சோகத்தில் அவர் இப்படி சுற்றி வருகிறாரோ என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved