MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... வாடிவாசலை விட்டு வெளியேறும் சூர்யா? வெற்றிமாறனின் நெக்ஸ்ட் சாய்ஸ் இவரா?

இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... வாடிவாசலை விட்டு வெளியேறும் சூர்யா? வெற்றிமாறனின் நெக்ஸ்ட் சாய்ஸ் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலக உள்ளதாக கூறப்படுவதால், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
suriya, vetrimaaran

suriya, vetrimaaran

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆன திரைப்படம் தான் வாடிவாசல். சி.சு.செல்லப்பா எழுதிய நாவலைத் தழுவி தான் இப்படத்தை எடுக்க உள்ளார் வெற்றிமாறன். கடந்த 2020-ம் ஆண்டே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

24
vaadivaasal

vaadivaasal

ஆனால் அந்த அறிவிப்புக்கு பின்னர் அப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் வெற்றிமாறன் தான். அவர் விடுதலை பட பணிகளில் பிசியானதால், அப்படத்தை முடிக்கும் வரை வாடிவாசல் பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது வரை விடுதலை படத்தின் பணிகள் முடிவடையாததால், வாடிவாசல் இன்னும் கிடப்பில் தான் போடப்பட்டு உள்ளது. மறுபுறம் சூர்யாவும் இப்படத்திற்காக சுமார் 4 ஆண்டுகள் காத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளை கலக்கும் Manjummel Boys.. நேரில் அழைத்து வாழ்த்தும் கோலிவுட் ஜாம்பவான்கள் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

34
suriya plan to quit vaadivaasal

suriya plan to quit vaadivaasal

சூர்யாவுக்கும் அடுத்தடுத்து படங்கள் உள்ளதால், தற்போது வாடிவாசல் படத்தில் இருந்து வெளியேற அவர் முடிவெடுத்து உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் உடன் சந்திப்பு மேற்கொண்ட சூர்யா, இதுகுறித்து தன் முடிவை கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. சூர்யா விலக முடிவு செய்துள்ளதால் அவருக்கு பதில் வேறு நடிகரை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் வெற்றிமாறன் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

44
Soori replace suriya in vaadivaasal

Soori replace suriya in vaadivaasal

அந்த வகையில் சூர்யா விலகினால் அவரின் பர்ஸ்ட் சாய்ஸாக தனுஷ் தான் இருப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் புது டுவிஸ்ட் ஆக சூர்யாவுக்கு பதில் நடிகர் சூரியை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன வெற்றிமாறன், வாடிவாசலிலும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வணங்கான் படத்தை தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜிகுஜிகுவென்ற நீல நிற ஆடை.. கண்களை கொள்ளைகொள்ளும் கவர்ச்சி - நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
வெற்றிமாறன்
சூரி (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved