Asianet News TamilAsianet News Tamil

Selvaraghavan : கேப்டன் சொன்ன ஆழமான விஷயம்.. மனமுருகி பேசிய செல்வராகவன் - செம மெசேஜ் என்று புகழும் Fans!

Director Selvaraghavan : கோலிவுட் திரை உலகில் நல்ல கதை அம்சம் கொண்ட பல படங்களை இயக்கி, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் தான் செல்வராகவன்.

Director and Actor Selvaraghavan Speaks about how to live life quoting captain vijayakanth speech ans
Author
First Published May 10, 2024, 5:26 PM IST

"என் ராசாவின் மனசிலே", "ஆத்தா உன் கோயிலிலே" மற்றும் "எட்டுப்பட்டி ராசா" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் மகன் தான் செல்வராகவன். கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தனுஷின் "காதல் கொண்டேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். 

தொடர்ச்சியாக அவருடைய இயக்கத்தில் வெளியான "7ஜி ரெயின்போ காலனி", "புதுப்பேட்டை", "யாரடி நீ மோகினி", "ஆயிரத்தில் ஒருவன்" மற்றும் "மயக்கம் என்ன" போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக மாறியது. இன்றளவும் இவருடைய இயக்கத்துக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

சம்மரில் சில் பண்ணும் நடிகை வசுந்தரா காஷ்யப்.. க்யூட் போட்டோஸ் இதோ..

அதேபோல நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராகவும் தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். தற்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன், தனது சமூக வலைதள பக்கங்களில் அவப்பொழுது நல்ல பல கருத்துக்களை பேசுகிறார் அவர்.

அந்த வகையில் மனிதர்களுடைய வாழ்க்கை பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல, சிறு சிறு விஷயங்களில் இன்பம் காண்பதற்கு பணம் அவசியமில்லை. ஒரு பயணிகளைப் போல நாம் இந்த பயணத்தில் கண்களில் படும் அனைத்தையும் ரசித்து மகிழ்ந்து வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

அதேபோல மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஒருமுறை பணம் என்ன பெரிய பணம், நாம் இறக்கும் பொழுது நம்மை அடக்கம் செய்பவர் நம் இடுப்பில் இருக்கும் அரைஞான் கயிறை கூட அறுத்துவிட்டு தான் நம்மை புதைக்கிறார் என்று கூறியிருப்பார். அதை மேற்கோள் காட்டி பேசிய அவர் வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமல்ல நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியிருக்கிறார். இதற்கு அவருடைய ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி, கமல் 50 லட்சம் சம்பளம் வாங்கிய போது.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios