- Home
- Gallery
- ”பிக்பாஸுக்கு பின்னர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தோம்.. யாருக்கும் இதை செய்யாதீங்க” ஐஷுவின் தந்தை உருக்கம்
”பிக்பாஸுக்கு பின்னர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தோம்.. யாருக்கும் இதை செய்யாதீங்க” ஐஷுவின் தந்தை உருக்கம்
பிக்பாஸ் ஐஷுவின் தந்தை அஷ்ரப் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதுவரை இல்லாத வகையில் வைல்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா டைட்டில் வின்னரானார். மணி 2-வது இடத்தையும், மாயா 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லை.
பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது தொடங்கி பல நிகழ்வுகள் சர்ச்சையாக மாறியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தான் கமல்ஹாசன் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். கமலின் வார இறுதி எபிசோடுகள், அவர் மாயாவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
BB Tamil 7
பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு நேர்ம்றையான விமர்சனங்களையும் சிலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றுத்தரும். அந்த வகையில் நெகட்டிவ் விமர்சனங்களுடன் வெளியேற்றப்பட்டவர் ஐஷு. நிக்ஸனுடன் சேர்ந்த அவர் செய்த சில செயல்கள், மாயா, பூர்ணிமா உடன் சேர்ந்து கொண்டு சில செயல்களை செய்து, பிரதீப்பிடம் நன்றாக பேசிக்கொண்டே, அவருக்கு எதிராக ரெட் கார்டு கொடுக்க சொன்னது பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் நிக்சன் ஐஷுவிடம் நடந்து கொண்ட விதம் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது செயல்களுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஐஷு. சமீபத்தில் தான் ஐஷு பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் கூட நிக்சன் பற்றி அவர் பேசவில்லை.
இந்த நிலையில் ஐஷுவின் தந்தை அஷ்ரப் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர் “ ஐஷவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த போது, அதை எவ்வளவு தடுக்க முடியுமோ அவ்வளவு தடுத்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று எவ்வளவோ ஐஷுவிடம் எடுத்து சொன்னேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை.
BB Tamil 7
எங்கள் குடும்பம் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்போம். ஐஷுவும், அலீனாவும் டான்ஸ் வீடியோக்களை போடுவார்கள். நானும் பாசிட்டிவான ஸ்டோரிக்களை போடுவேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வரை நான் நெகட்டிவ் கமெண்ட்களை பார்த்ததே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நான் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். எங்கள் குடும்பமே கடுமையாக பாதிக்கப்பட்டோம்.. அவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறது.
போட்டியாளர்கள் குறித்து வன்மத்துடன் மோசமாக கமெண்ட் செய்கின்றனர். எனவே மிகவும் மோசமாக, விஷமத்துடன் யாரும் கமெண்ட் செய்ய வேண்டாம். என் பொண்ணுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டதால் நான் இதை சொல்லவில்லை.. யாருக்கும் இப்படி செய்ய வேண்டாம்..” என்று தெரிவித்தார்.
ஐஷு வெளியிட்ட மன்னிப்பு கடிதம் குறித்து பேசிய அவர் “ மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டும் என்று நான் ஐஷுவை கட்டாயப்படுத்தவில்லை. நிறைய பேர் நான் கட்டாயப்படுத்தி தான் ஐஷு வெளியிட்டதாக கூறினார்கள். ஆனால் அப்படி நான் செய்யவில்லை. அது ஐஷுவாக எழுதிய கடிதம் தான். கொஞ்ச காலம் பிரேக் எடுத்து, பின்னர் அதை கடிதத்தை ஐஷு நீக்கிவிட்டார். மனம் வருந்தி தான் ஐஷு அந்த கடிதத்தை எழுதினார்” என்று தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேவரைட் போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த விஷ்ணு என்று பதிலளித்தார். மேலும் பிரதீப் குறித்து பேசிய அவர் “ பிரதீப் ஒரு சிறந்த மனிதர். அவர் வைல்ட் கார்டில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போவதாக தகவல் கிடைத்தது. அப்போது பிரதீப் உடன் நான் பேசினேன். நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் என் பொண்ணுக்கு பாதுகாப்பா இருங்க என்று கூறினேன்.. ஆனால் அவர் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டது எனக்கு வருத்தமாக இருந்தது. அதற்கு என்னை பலரும் விமர்சித்தனர். அதன்பின்னர் அவரிடம் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஐஷுவிற்கு எல்லா கதவுகளும் மூடப்பட்டாலும், அவருக்கு புதிய கதவை திறக்கும் நபராக நான் இருப்பேன்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை மறந்துவிட்டு நேர்மறை எண்ணங்களுடன் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.