பிக்பாஸ் பூர்ணிமாவா இது? கடற்கரையில் கவர்ச்சி புயலாக மாறி போட்டோஷூட் நடத்தியதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பூர்ணிமா, கடற்கரையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Poornima Ravi
யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் பூர்ணிமா. இவர் கடந்த மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களும் ஒருவராகவும் பூர்ணிமா இருந்தார். கிட்டத்தட்ட 100 நாட்கள் நெருங்கிய நிலையில், பணப்பெட்டியோடு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் பூர்ணிமா.
Poornima Ravi Photos
பிக்பாஸ் வரலாற்றில் அதிக பணத்தோடு வெளியேறிய போட்டியாளர் பூர்ணிமா தான். அவர் ரூ.16 லட்சம் தொகையுடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விஷ்ணுவை காதலித்த பூர்ணிமா, ஒரு கட்டத்தில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பூர்ணிமா நடித்த அன்னபூரணி திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்திருந்தார் பூர்ணிமா.
இதையும் படியுங்கள்... குழந்தைய பாத்துக்க முடியல... என் கணவர் தான் அம்மாவாக இருந்து இதை செய்தார்- மகன் Plato பற்றி மனம்திறந்த ஆனந்தி
Bigg Boss Poornima
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு பூர்ணிமா வெளியே வந்த பின்னர் அவர் கதையின் நாயகியாக நடித்த செவப்பி என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அதில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகளை தட்டித் தூக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் பூர்ணிமா.
Poornima Ravi Latest Photoshoot
அதன் ஒரு பகுதியாக, நடிகைகள் கையாளும் யுக்தியான, போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார் பூர்ணிமா. அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஈரம் சொட்ட கருப்பு நிற சேலையில் கவர்ச்சி புயலாக மாறி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கிளாமர் ரோலில் நடிக்கவும் அவர் கிரீன் சிக்னல் காட்டி வருவதாக கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து!