குழந்தைய பாத்துக்க முடியல... என் கணவர் தான் அம்மாவாக இருந்து இதை செய்தார்- மகன் Plato பற்றி மனம்திறந்த ஆனந்தி
நடிகை கயல் ஆனந்தி, தன் காதல் கணவர் பற்றியும் தன்னுடைய மகன் பிளாட்டோ பற்றியும் முதன்முறையாக நேர்காணல் ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
Kayal Anandhi
பொறியாளன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆனந்தி. பின்னர் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானதால் அவரை கயல் ஆனந்தி என்றே அழைக்க தொடங்கினர். இதையடுத்து சண்டிவீரன், த்ரிஷா இல்லேனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் ஆனது.
Kayal Anandhi Husband
இவர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கிய அலாவுதீனின் அற்புத கேமரா மற்றும் அக்னி சிறகுகள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் சாக்ரடீஸ். இந்த ஜோடிக்கு பிளாட்டோ என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்துவிட்ட கயல் ஆனந்தி, தன்னுடைய மகன் பற்றி முதன்முறையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... படத்துல தான் காமெடி பீஸ்.. ஆனா நிஜத்துல 500 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகர் பற்றி தெரியுமா?
Kayal Anandhi son
அதில் அவர் கூறியதாவது : “ஒவ்வொரு நாளும் என் மகனை பார்க்கும் போது ஹாப்பியா இருக்கும். தினமும் எதாவது ஒரு புது விஷயம் பண்ணுவான். நான் ஷூட்டிங் போனால் அவனை ரொம்ப மிஸ் பண்ணுவேன். இப்போ அவன் பேசவும் ஆரம்பித்துவிட்டதால், நான் வீட்டுக்கு போன உடனே, ஓடி வந்து என்னை கட்டிப்புடிச்சி மிஸ் யூனு சொல்லுவான். நான் டெலிவெரிக்கு முன்னர் வரை ஷூட்டிங் போனேன். கர்ப்பமாக இருக்கும் போது 8-வது மாதம் வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன்.
Kayal Anandhi son Plato
கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் என் பெற்றோரும், என் கணவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். எனக்கு நார்மல் டெலிவரி அல்ல சி செக்ஷன் தான். அதனால குழந்தை பிறந்த பின்னர் முதல் 3 நாட்களுக்கு என்னால் அவனை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அப்போ ஒரு அம்மாவாக இருந்து என் கணவர் தான் பார்த்துக் கொண்டார். பிளாட்டோ எனக்கு மகனாக கிடைத்ததற்கு நான் ரொம்ப அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என ஆனந்தி பூரிப்புடன் கூறினார்.
இதையும் படியுங்கள்... எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து!