- Home
- Gallery
- டைட்டில் இல்லாட்டி என்ன? பூர்ணிமா ரவி காட்டில் பெய்யும் அடை மழை - விரைவில் வரும் அடுத்த பட அறிவிப்பு!
டைட்டில் இல்லாட்டி என்ன? பூர்ணிமா ரவி காட்டில் பெய்யும் அடை மழை - விரைவில் வரும் அடுத்த பட அறிவிப்பு!
Actress Poornima Ravi : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வலுவலான போட்டியாளராக திகழ்ந்து வந்த பூர்ணிமா ரவி, இறுதியில் நடந்த Money Taskல் 16 லட்சம் பணத்துடன் வெளியேறினார்.

Poornima
கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் போட்டிகள் தமிழில் நடந்து வந்தாலும், இதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இரு வீடுகளுடன் மிகவும் சுவாரசியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் 2வது முறையாக ஒரு பெண் போட்டியாளர் இந்த முறை டைட்டில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிக்காவின் Deep Fake வீடியோ.. உருவாக்கியது ஏன்? கைதான 24 வயது நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!
Actress Poornima Ravi
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக நடந்த money டாஸ்கில் 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து அவராகவே வெளியேறினார் நடிகை பூர்ணிமா ரவி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அவர் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Covai Film Factory
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த புகழின் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். கோவை பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூர்ணிமா ரவி. ஹரி மஹாதேவன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் First Look விரைவில் வெளியாகவுள்ளது.