MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கையில் ஒயின்... கண்ணில் காதலுடன் படு நெருக்கமாக கிறிஸ்துமஸை கொண்டாடிய அமீர் - பாவனியின் ரொமாண்டிக் கிளிக்ஸ்

கையில் ஒயின்... கண்ணில் காதலுடன் படு நெருக்கமாக கிறிஸ்துமஸை கொண்டாடிய அமீர் - பாவனியின் ரொமாண்டிக் கிளிக்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலர்களாக மாறிய அமீரும், பாவனி ரெட்டியும் ஜோடியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 26 2023, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ameer pavani reddy

Ameer pavani reddy

விஜய் டிவி சீரியல்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாவனியை துரத்தி துரத்தி காதலித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர்.

25
Biggboss fame Ameer pavani

Biggboss fame Ameer pavani

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அமீரும், பாவனியும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர். இந்த நடன நிகழ்ச்சியின் போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனதையடுத்து இருவரும் லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழத்தொடங்கினர். 

35
pavani reddy Lover Ameer

pavani reddy Lover Ameer

திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வசித்து வரும் அமீர் - பாவனி ஜோடி சினிமாவிலும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் அமீரும், பாவனியும் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45
Ameer pavani christmas

Ameer pavani christmas

அமீர் - பாவனி இருவருமே விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமீர் - பாவனி ஜோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

55
Ameer pavani christmas celebration

Ameer pavani christmas celebration

கையில் ஒயின் கிளாஸ் உடன் படு நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர். அமீர் - பாவனி ஜோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் திருமணத்துக்கு முன்னரே இவ்வளவு நெருக்கமா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... டிக்கெட் டூ பினாலே-வில் செம்ம டுவிஸ்ட்... முதல் ரவுண்டிலேயே எலிமினேட் ஆன 3 பேர் - பைனலுக்கு செல்லப்போவது யார்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
பாவனி ரெட்டி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved