Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்? அதிர்ச்சியில் ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ்!
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
Bigg Boss
மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Tamil 7
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தி பிக் பாஸ் இதுவரை 16 சீசன்களை கடந்த தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
Bigg Boss Tamil
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல 2017ஆம் ஆண்டு தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 7வது சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Bigg Boss 17
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர் கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் 17' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே என்ற போட்டியாளர் தனது மாதவிடாய் காலத்தை தவறவிட்டதாகவும், கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Ankita Lokhande
அங்கிதா லோகாண்டே ஒரு இந்தி திரைப்பட நடிகை ஆவார். சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தோனி பட புகழ் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா