Health Tips : இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க.. இந்த நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்..
நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, நீங்கள் ஆரோக்கியமான உணவை சரியான முறையில் சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக, காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா..? இப்போது என்னென்ன உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்..அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்..
சூடான நீர் மற்றும் எலுமிச்சை சாறு: தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, எடை குறையும், செரிமானப் பிரச்சினைகள் வராது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
ஊறவைத்த பாதாம் அல்லது பிஸ்தா: அதுபோல, காலையில் ஊறவைத்த பாதாம் அல்லது பிஸ்தா சாப்பிட்டால் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். காரணம், இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கும். குறிப்பாக இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
இதையும் படிங்க: Foods to Avoid in Summer : கொளுத்தும் இந்த கோடை காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..
ஸ்ட்ராபெர்ரி: காலையில் வெறும் வயிற்றில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் மூட்டு வலி மற்றும் உடல் வலியைத் தடுக்கிறது. அதேபோல், சியா விதைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: Calcium Rich Foods : உங்களுக்கு பால் பிடிக்கவில்லையா.? பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!!
பப்பாளி: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்படி சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். மேலும் இதில் உள்ள பண்புகள் எலும்புகள் வலுவாகவும் உறுதியாகவும் வைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது பிபி மற்றும் சுகரை கட்டுப்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D