- Home
- Gallery
- உங்க மூக்கை சுத்தி கரும்புள்ளிகள் அசிங்கமா இருக்கா..? அப்ப இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க..
உங்க மூக்கை சுத்தி கரும்புள்ளிகள் அசிங்கமா இருக்கா..? அப்ப இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணுங்க..
Homemade Remedies For Blackheads : மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையும், சருமத்தையும் கெடுக்கும். எனவே, சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் அவற்றை சுலபமாக அகற்றலாம்.

மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் முகத்தின் அழகையும், சருமத்தையும் கெடுக்கும். மேலும் இந்த கரும்புள்ளிகளை அகற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் அவற்றை சுலபமாக அகற்றலாம்.
முட்டை: மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற முட்டை உதவும். இதற்கு முட்டையில் வெள்ளைக்கருவை எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
பேக்கிங் சோடா: கரும்புள்ளிகளை நீக்க, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 2 ஸ்பூன் தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் தேங்கியுள்ள எண்ணெயை சுத்தம் செய்யும்.
இதையும் படிங்க: Korean Glass Skin : அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க; உங்களுக்கும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கிடைக்கும்!!
கிரீன் டீ: மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை ஆகற்ற ஒரு ஸ்பூன் கிரீன் டீ இலைகளை தண்ணீரில் கலந்து, அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில், தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: சருமம் வறண்டு இருக்கிறதா..? இந்த அஞ்சுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க..மென்மையாக மாறும்!
மஞ்சள்: மஞ்சள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் என்ன பண்புகள் அதிகம் உள்ளது. எனவே, மூக்கில் இருக்கும் மஞ்சளின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து, அதை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D