Beauty Tips : கொரியன்ஸ் போல கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..? சியா விதையை இப்படி யூஸ் பண்ணுங்க!
சியா விதை சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவும் தெரியுமா? எனவே, இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சியா விதைகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், இந்த விதையை பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமின்றி, இது முடியை பலப்படுத்தும். எனவே, இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சியா விதைகளில் வைட்டமின் சி, ஏ, ஃபோலேட், இரும்பு மற்றும் பொட்டாசியம் கூறுகள் இருப்பதால், இவை சருமத்தின் அழகை அதிகரிக்கும். அதற்கு நீங்கள், இந்த விதைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே சில வாரங்களிலேயே முன்னேற்றத்தை காண முடியும்.
மேலும், சியா விதைகளில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானம் சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, சியா விதைகளில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், இது உடலை மட்டுமல்ல, சருமத்தையும் ஈரப்பதமாக்குகிறது.
அதுபோல், சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் பிரச்சனையைத் தடுக்கிறது மற்றும் சேதமடைந்த சருமத்தை சரிசெய்கிறது. மேலும், இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பெரிதும் பாதுகாக்கிறது. இதன் காரணமாக, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற முன்கூட்டிய வயதான அறிகுறிகள் தடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Chia Seeds : உடல் எடை மளமளவென குறைய தினமும் இந்த விதையை தண்ணீரில் போட்டு குடிங்க.!!
சியா விதைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைக்கும். இது தவிர, வீக்கம் பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
இதையும் படிங்க: சியா விதைகள் அதிகமா சாப்பிடுறீங்களா? கவனம்.. இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்..
சியா விதைகளை இப்படி பயன்படுத்துங்கள்: முதலில், சியா விதைகளை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதன் பிறகு, அதில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேன் சேர்த்து, பின்னர் அதை உங்கள் முகம், கைகள், கால்கள் அல்லது முழு உடலிலும் பயன்படுத்துங்கள். விரைவான நன்மைகளை பெற தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D