தங்கம் விக்கிற விலையில்.. பிரேம்ஜி மனைவிக்கு இத்தன சவரன் நகை சீதனமாக வழங்கப்பட்டதா? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்
45 வயது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த நடிகர் பிரேம்ஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து என்கிற பெண்ணுடன் திருமணம் ஆனது.
Premgi marriage
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக கோலிவுட்டில் வலம் வருபவர் தான் பிரேம்ஜி அமரன். 45 வயதாகியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து பிரேம்ஜியின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
Premgi wedding photos
பிரேம்ஜி இந்து என்பவரை தான் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து யார், அவருக்கு திருமணத்துக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட நகைகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா? இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி?
Premgi wife Indu
அதன்படி, பிரேம்ஜி மனைவி இந்து வங்கியில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் இந்து பிராமண வீட்டுப் பெண் என்பதால் அவர்களது திருமணம் பிராமண முறைப்படி நடைபெற்றதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார். மேலும் கங்கை அம்ரன் திருமணத்தில் கலந்துகொண்டாலும் அவருக்கு பதில் வெங்கட் பிரபு தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து பிரேம்ஜியின் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
bayilvan
மேலும் பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் 15 வயது வித்தியாசம் என கூறிய பயில்வான், இந்து தான் பிரேம்ஜியை துரத்தி துரத்தி லவ் பண்ணியதாகவும் கூறி இருக்கிறார். பிரேம்ஜியை திருமணம் செய்துகொண்ட இந்துவுக்கு அவரது பெற்றோர் ஆயிரம் சவரன் தங்க நகையை சீதனமாக கொடுத்ததாகவும் பயில்வான் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்போ தங்கம் விக்கிற விலையில இவ்வளவு சவரனா... அநேகமா இது உருட்டா தான் இருக்கும் என பயில்வானை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Vidaamuyarchi : விடாமுயற்சிக்கு வில்லனாகும் உதயநிதி... லைகாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரெட் ஜெயண்ட்ஸ்?