- Home
- Gallery
- அருண் விஜய் சிஸ்டர்ஸா இது? வயசு 50ஐ தாண்டினாலும் ஹீரோயின் போல் ஜொலிக்கும் அனிதா & கவிதாவின் லண்டன் கிளிக்ஸ்
அருண் விஜய் சிஸ்டர்ஸா இது? வயசு 50ஐ தாண்டினாலும் ஹீரோயின் போல் ஜொலிக்கும் அனிதா & கவிதாவின் லண்டன் கிளிக்ஸ்
குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் அருண் விஜய், அங்கு தன் அக்காக்கள் அனிதா மற்றும் கவிதா உடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

anitha vijayakumar Family
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவி மஞ்சுளா இறந்துவிட்டதால், தற்போது முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார். அவரின் வாரிசுகள் திருமணமாகி செட்டிலாகி விட்டனர்.
anitha vijayakumar London Trip Photos
விஜயகுமாரின் மகள்கள் கவிதா, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் நடித்து திருமணத்துக்கு பின்னர் செட்டிலாகிவிட்டனர். அதேபோல் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ரெட்ட தல மற்றும் வணங்கான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் பாலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள வணங்கான் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு இப்பகூட வருத்தப்படுவேன்... நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான் - நடிகை ரேவதி ஓபன் டாக்
anitha vijayakumar With her Parents
ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளதால், குடும்பத்துடன் தற்போது வெளிநாட்டுக்கு பறந்துள்ளார் அருண் விஜய். லண்டன் சென்றுள்ள அவர் அங்கு தன் அக்காக்கள் அனிதா மற்றும் கவிதா உடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அருண் விஜய்யோடு அவரது தந்தை விஜயகுமாரும் தன் மனைவியுடன் லண்டனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
Arun Vijay with his Sisters
அருண் விஜய்யோடு அவரது அக்காக்கள் அனிதா மற்றும் கவிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருவரும் செம்ம யங் லுக்கில் காட்சியளிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே வயது 50ஐ தாண்டிவிட்டது. குறிப்பாக அண்மையில் தான் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு திருமணம் ஆனது. இத்தனை வயதிலும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் அனிதா விஜயகுமார் மற்றும் கவிதா விஜயகுமாரின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Atlee : பேராசையால் பறிபோன பிரம்மாண்ட வாய்ப்பு... அட்லீ - அல்லு அர்ஜுன் படம் டிராப்? காரணம் என்ன?