MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு இப்பகூட வருத்தப்படுவேன்... நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான் - நடிகை ரேவதி ஓபன் டாக்

ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு இப்பகூட வருத்தப்படுவேன்... நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான் - நடிகை ரேவதி ஓபன் டாக்

80-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை ரேவதி, தனது திருமணம் மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.

2 Min read
Ganesh A
Published : Jun 16 2024, 09:44 AM IST| Updated : Jun 16 2024, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Revathi

Revathi

1980-களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் ஒருவர் தான் ரேவதி. நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்த ரேவதி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் திருமணம் குறித்தும் மனம்திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “பாரதிராஜாவிடம் தான் நடிப்பு பயிற்சி எடுத்தேன். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அவரின் மண்வாசனை படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார்.

24
Actress Revathi

Actress Revathi

ஸ்கூல் பாரதிராஜா என்றால் எனக்கு டிப்ளமோ படித்த ஃபீல் கொடுத்தது பாலசந்தர் தான். அவரிடம் ரொம்ப புடிச்ச விஷயம் எந்த ஒரு டயலாக்கும் நேருக்கு நேர் பேசும்படி எடுக்கமாட்டார். யதார்த்தமாக வீட்டில் எப்படி பேசிக்கொள்வோமோ அப்படி தான் எடுப்பார். என்னுடைய டான்ஸ் திறமையை கொஞ்சம் வெளியில் கொண்டுவந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். ஆனால் புன்னகை மன்னன் படம் மூலம் தான் என்னுடைய முழுமையான டான்ஸ் திறமை வெளிவந்தது.

இதையும் படியுங்கள்... நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் 5 நடிகைகள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

34
Revathi Husband

Revathi Husband

கமல் அருமையான டான்சர் என்பதால் அவருடன் ஆட எனக்கு பதற்றமாக இருந்தது. இதனால் புன்னகை மன்னன் படத்திற்காக மூன்று நாட்கள் முன்னதாகவே எனக்கு நடன பயிற்சியை தொடங்கிவிட்டார் பிருந்தா. அதன்பின்னர் தான் கமல் வந்து சேர்ந்துகொண்டார். சினிமாவில் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சானா.. இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை நினைத்து மட்டும் இப்பவும் வருத்தப்படுவேன்.

44
80s heroine revathi

80s heroine revathi

அது என் கல்யாணம், நான் ஒரு 4 வருஷம் கழிச்சு திருமணம் செய்திருக்கணும், 17 வயசுல நடிக்க வந்து 20 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த டைம்ல தான் புன்னகை மன்னன், மெளன ராகம் படங்கள் நடித்திருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் நடிக்காமல் இருந்துட்டு பின்னர் கிழக்கு வாசல், தேவர் மகன் போன்ற நல்ல படங்களில் நடித்ததால் மக்கள் ஏற்றுக்கொண்டாலும், நல்ல நல்ல படங்கள் நிறைய பண்ணுனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிருக்கலாம்னு இப்ப கூட தோணும்” என ரேவதி கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Atlee : பேராசையால் பறிபோன பிரம்மாண்ட வாய்ப்பு... அட்லீ - அல்லு அர்ஜுன் படம் டிராப்? காரணம் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved