செத்தா உன் படத்துல தான் சாகணும்னு ஆசைப்பட்ட பிரபலம்... கூட்டிட்டு வந்து கதையை முடித்த லோகேஷ் கனகராஜ்
செத்தா லோகேஷ் கனகராஜ் படத்தில் தான் சாக வேண்டும் எனக்கூறிய பிரபலத்தின் ஆசையை லியோ படம் மூலம் நிறைவேற்றி உள்ளார் லோகேஷ்.
Lokesh Kanagaraj
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகி அடுத்ததாக இயக்கிய திரைப்படம் தான் லியோ. விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. லியோ படத்தில் சஞ்சய் தத் உள்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளதால் இதனை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர்.
vijay, Lokesh Kanagaraj
லியோ படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதற்கு அதில் உள்ள எக்கச்சக்கமான நட்சத்திர பட்டாளமமும் ஒரு காரணம். நல்ல தரமான நடிகர்களை நடிக்க வைத்தும் அவர்களை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்கிற விமர்சனங்களையும் பார்க்க முடிகிறது. அப்படி லோகேஷ் வேஸ்ட் பண்ணிய ஒரு கேரக்டர் தான் அனிராக் கஷ்யப்பின் கேரக்டர். அவர் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Anurag kashyap
இமைக்கா நொடிகள் படத்தில் தான் எந்த அளவுக்கு டெரரான வில்லன் என்பதை காட்டிய அனுராக் கஷ்யப்பை கூட்டிவந்து ஒரு 20 விநாடிகளில் போட்டுத்தள்ளி இருக்கிறார் லோகேஷ். அதைப்பார்க்கும் போது என்ன இவரை டம்மி பீஸா காட்டிருக்காங்க என தான் எண்ணத் தோன்றுகிறது. அந்த கேரக்டர் மூலம் அனுராக் கஷ்யப்பின் வினோதமான ஆசையையும் லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றி இருக்கிறார்.
Anurag kashyap, lokesh kanagaraj
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுராக் கஷ்யப் அளித்த பேட்டியில், நான் செத்தால் அது லோகேஷ் படத்தில் தான் சாக வேண்டும் என கூறி இருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே லியோ படத்தில் விஜய் கையால் அவரை கொன்றுள்ளார் லோகி. இதையெல்லாம் பார்க்கும்போது, ஒருவேளை அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காக தான் இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தாரா லோகி என்று நினைக்க தோன்றுகிறது.
இதையும் படியுங்கள்... Bigg Boss Elimination: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல போகும் பிரபலம் இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்