அவமானத்தால் தற்கொலைக்கு முயலும் முத்துப்பாண்டி! சௌந்தரபாண்டி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் அப்டேட்!
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், ரத்னாவை காணவில்லை என எல்லாரும் தேட தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரத்னா தெருமுனையில் உட்கார்ந்து பீல் செய்து கொண்டிருக்க ஷண்முகம் என்னாச்சு என்று கேட்கிறார். முத்துப்பாண்டி உன்னையும் வெங்கடேசையும் ஏதாவது பண்ணிடுவானோனு பயமா இருக்கு என்று சொல்ல ஷண்முகம் நீ நல்ல தங்கச்சி, நான் இருக்க வரைக்கும் அவங்களால் ஒன்னும் பண்ண முடியாது என்று ஆறுதல் கூறுகிறார்.
அதனை தொடர்ந்து இங்கே முத்துப்பாண்டி அவமானத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய சௌந்தரபாண்டி அவனை தடுத்து நிறுத்துகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முத்துப்பாண்டி அவமானம் தாங்காமல் கதறி அழ சௌந்தரபாண்டி பாக்கியத்தை திட்ட அவள் ரத்னாவுக்கு உன்னை பிடிக்கல டா என்று சொல்ல, பிடிக்கலைனாலும் கட்டி வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி துப்பாக்கியை எடுத்து கொண்டு வாடா போலாம் என்று சொல்கிறார்.
முத்துப்பாண்டி ரத்னாவை கொல்லவா என்று கேட்க இல்லை அவ உன்னை வேணான்னு சொல்ல காரணமாக இருப்பவனை கொல்ல என வெங்கடேஷ் வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.