பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் முன்பு நான் ஒரு ரவுடி என நிக்சன் சீன் போட, நாயை வைத்து பிக்பாஸ் அவரை அலறவிட்ட வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் வீட்டில், ஒரு பக்கம் பிரச்சனைகள் பத்தி கொண்டு எரிந்தாலும்... ஐஷுவும், நிக்சனும் பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக காதல் லீலைகளை அரங்கேற்றி வருகிறார்கள். ஆரம்பத்தில் பிரதீபிடம், இந்த இடத்திற்கு நான் வர பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன், என வாய் கிழிய பேசிய நிக்சன் பிக்பாஸ் விளையாட்டை ஓரம் கட்டி வைத்து விட்டு காதல் விளையாட்டை தான் அதிகம் விளையாடி வருகிறார்கள்.

அதே போல், மணி - ரவீனா ஒன்றாக சுற்றி கொண்டிருந்த போது அவர்களிடம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி, எனவே... இருவரும் தொட்டு தொட்டு பேசவேண்டாம் என அட்வைஸ் பண்ணிய நிக்சனா இப்படி என ஆச்சர்யப்படும் அளவுக்கு ஐஷுவிடம் கொஞ்சம் எல்லை மீறி செயல்பட்டு வருகிறார் நிக்சன். 

Leo Collection: சும்மா தடாலடியா இருக்கே..! இதுவரை வெளிநாட்டில் எந்த படமும் செய்திடாத வசூல் சாதனை படைத்த லியோ!

எந்நேரமும் ஐஷு பின்னாடியே சுற்றிக்கொண்டிருக்கும் இவர், அவருக்கு தலை கோதி விடுவது, வேஷ்டி கட்டி விடுவது, கன்னத்தை கிள்ளி கொஞ்சுவது, கால்களை பிடித்து இழுப்பது என பார்பவர்களே கூச்சப்படும் அளவுக்கு நடந்து கொள்கிறார். இதுகுறித்த வீடியோக்களை வெளியிட்டு கண்டமேனிக்கு தாளித்து வரும் நெட்டிசன்கள், அவருக்கு காஜி நிக்சன் என பெயர் வைத்து கிழி கிழினு கிழித்து வருகிறார்கள். அதே போல் ஆரம்பத்தில் ஐஷுவுக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்து விட்டது. இதனால், இந்த முறை ஐஷு வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது ஒருபுறம் இருக்க, தற்போது... நிக்சன் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் மத்தியில் நான் ஸ்கூல் டைமில் ஒரு ரவுடி மாதிரி, யார் மேலையும் கையே வைக்க மாட்டேன் ஆனா அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கு... என்னோட அப்பா ஸ்கூலுக்கு வந்தாரு. அவருக்கு என் ஸ்கூலில் பல மாணவர்கள் ஃபேன் என சொல்கிறார். அந்த சமயத்தில் யாரோ தூங்கி கொண்டிருக்க, குசும்புத்தமனாக பிக்பாஸ் தன்னுடைய நாய்யை குறைக்க வைக்கிறார். இதில் பாவம் நிக்சன் ஒரு நிமிஷம் நடுங்கி விடுகிறார். இதுகுறித்த காட்சியை நெட்டிசன்கள், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நிக்சன் யாருக்கும் பயபுட மாட்டாரு ஆனா நாய்க்கு மட்டும் பயப்புடுவாரு போல என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.


Scroll to load tweet…