ஏலக்காய் சமையலில் சேர்ப்பதற்கு இதுதாங்க காரணம்..! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
ஏலக்காய் வாசனைக்கும் சுவைக்கும் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஏலக்காய் இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். மேலும், இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளின் வாசனைக்காக இது அதிகம் பயன்படுத்தப்படும்.
இது பல பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தெரியுமா? இதைப்பற்றி உங்களுக்கு தெரியாவிட்டால், ஏலக்காய் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்து, ஏலக்காயின் நன்மையை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
துர்நாற்றத்தை தடுக்கிறது: வாய் துர்நாற்றம் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஏலக்காய் உங்களுக்கு உதவும். ஏனென்றால் ஏலக்காய் வாய்வழி பாக்டீரியாவை கொள்ளும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது: ஏழைக்காய் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் உதவியாக இருக்கும். ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் டையூரிப் பண்புகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடும்: ஏலக்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது. ஏனெனில், இதில் இருக்கும் அமிலங்கள் புற்றுநோய் செல்களை அழிக்க பெரிதும் உதவுகிறது. ஏலக்காயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனைக்கு நல்லது: இன்றைய வாழ்க்கை முறையில் அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவது மிகவும் சகஜம். இந்த பிரச்சனையை நீக்குவதில் ஏலக்காயும் நல்ல பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஏலக்காய்.. எப்படி தெரியுமா?
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்: ஏலக்காய் அதிகரித்த இரத்த அழுத்தத்தை குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: உடல் எடை அதிகமாக இருக்கா? கவலைப்படாதீங்க! இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க..!!
வாந்தி குமட்டலை நிறுத்தும்: செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் இது உதவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொற்று நோய்க்கு நிவாரணம்: வானிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பூஞ்சை தொற்று போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏலக்காய் உதவும். ஏனெனில் இதில் உள்ள அத்தியாவசிய எண்ணைகள் மற்றும் சாறுகள் பல்வேறு வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.