MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலன் சித்தார்த்துக்கு பிறந்தநாள்... அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து அருவி போல் அன்பைக் கொட்டிய அதிதி ராவ்

காதலன் சித்தார்த்துக்கு பிறந்தநாள்... அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து அருவி போல் அன்பைக் கொட்டிய அதிதி ராவ்

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளுக்கு அவரது காதலி அதிதி ராவ் ஹைடரி வாழ்த்தி சொல்லி பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2024, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சித்தார்த். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி தன்னுடைய சொந்த நிறுவனம் மூலம் தயாரித்தும் இருந்தார் சித்தார்த்.

24

சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. பாய்ஸ் படத்துக்கு பின்னர் ஷங்கருடன் சித்தார்த் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... அருண் குமார் இயக்கத்தில் சீயான் 62.. "காந்தாரா" பாணியை கையிலெடுக்கும் இயக்குனர்? - போஸ்டரில் உள்ள Clue!

34

சினிமாவில் பிசியாக உள்ளதைப் போல் காதலிலும் செம்ம பிசியாக உள்ளார் சித்தார்த். அவர் நடிகை அதிதி ராவ் ஹைடரியை காதலித்து வருகிறார். இந்த ஜோடிக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் சித்தார்த் அதிதி ஜோடியின் திருமணமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்தன.

44

அதேபோல் நடிகர் சித்தார்த்தின் காதலி அதிதி ராவும் தாங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லையில்லா சிரிப்போடும், என்னெறென்றும் சந்தோஷம் தொடர வாழ்த்துக்கள். நீ என்ன செய்தாலும் அதை ஊக்குவிக்க என்றென்றும் உன்னுடைய சியர் லீடராக நான் இருப்பேன்” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் அதிதி.

இதையும் படியுங்கள்... நான் மாமாவோட அசிஸ்டண்ட் டைரக்டர் இல்ல; ஷங்கரின் மருமகன் இவ்ளோ பெரிய பணக்காரரா? யார் இந்த தருண் கார்த்திகேயன்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved