MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நான் மாமாவோட அசிஸ்டண்ட் டைரக்டர் இல்ல; ஷங்கரின் மருமகன் இவ்ளோ பெரிய பணக்காரரா? யார் இந்த தருண் கார்த்திகேயன்?

நான் மாமாவோட அசிஸ்டண்ட் டைரக்டர் இல்ல; ஷங்கரின் மருமகன் இவ்ளோ பெரிய பணக்காரரா? யார் இந்த தருண் கார்த்திகேயன்?

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் கணவர் தருண் கார்த்திகேயன், தான் தன்னுடைய மாமாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2024, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
aishwarya shankar

aishwarya shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் படையெடுத்து வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஷங்கர் மகளுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

24
aishwarya shankar, Tarun karthikeyan

aishwarya shankar, Tarun karthikeyan

ஐஸ்வர்யா ஷங்கரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து தற்போது தருணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் ஐஸ்வர்யா. ஷங்கரின் மருமகன் தருண் பற்றி சில தகவல்கள் பரவி வந்தன. அதன்படி அவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்றும், அவரின் திறமையை பார்த்து ஷங்கர் தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கோலிவுட்டில் தகவல்கள் உலா வந்தன.

இதையும் படியுங்கள்... டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்' ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

34
aishwarya shankar wedding

aishwarya shankar wedding

ஆனால் அது உண்மையில்லையாம். தான் தனது மாமனார் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று தருண் கார்த்திகேயனே செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார். நேற்று இயக்குனர் ஷங்கர், பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களுக்கு பிரம்மாண்ட விருந்து வைத்திருந்தார். அப்போது ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் தருண் கார்த்திகேயன் ஆகியோரும் அங்கு வந்த தங்கள் திருமணம் குறித்து பேசி இருந்தனர்.

44
Rathnam Movie

Rathnam Movie

அப்போது தான் தருண் தன்னுடைய பின்னணி பற்றி கூறினார். அதன்படி அவரும் அவரது தந்தையும் சேர்ந்து ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்களாம். தருண் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராம். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் தற்போது இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். ஹரி இயக்கத்தில் தற்போது விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தில் தான் தருண் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளாராம். மற்றபடி ஷங்கரிடம் தான் எந்த படத்திலும் பணியாற்றியதில்லை என தருண் கூறினார்.

இதையும் படியுங்கள்... Priyamani About Husband: லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு! கணவர் சொன்ன வார்த்தை... மனம் திறந்த நடிகை பிரியாமணி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved